உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கரடிவாவியில் குரங்கார் சேட்டை

 கரடிவாவியில் குரங்கார் சேட்டை

பல்லடம்: பல்லடம் அடுத்த கரடிவாவி கிராமத்தில், குரங்கு ஒன்று முகாமிட்டுள்ளது. அங்குள்ள கடைகள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து சேட்டை செய்து வருவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த சில தினங்களாக கரடிவாவி பகுதியில் முகாமிட்டுள்ள குரங்கு ஒன்று, இங்குள்ள கடைகளுக்கு சென்று பழங்கள், தின்பண்டங்களை எடுத்துச் சென்று விடுகிறது. குடியிருப்பு பகுதியிலும் நுழைவதால், குழந்தைகள், சிறுவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. திடீரென வந்த குரங்கை கண்டு நாய்களும் அதை துரத்துவதால், அவற்றுக்கு இடையே மோதல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. குரங்கை பிடித்துச் செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை