உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரியல் எஸ்டேட் பங்குதாரர் கொலை: உறவினர் கைது

ரியல் எஸ்டேட் பங்குதாரர் கொலை: உறவினர் கைது

வெள்ளகோவில்: முத்துார், வரக்காளிபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி, 45; உறவினரான, ராஜ்குமார், 45, என்பவருடன் சேர்ந்து, ரியல் ஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். ஈஸ்வரமூர்த்தி, தனது தந்தை கிட்டுசாமி, 67 என்பவரை டூவீலரில் அழைத்து கொண்டு சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த ராஜ்குமார் டூவீலர் மீது மோதினார். கீழே விழுந்த ஈஸ்வரமூர்த்தி மீது காரை ஏற்றியும், இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார். ராஜ்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: ராஜ்குமாருக்கு, ஒரு கோடி ரூபாய் வரை கடன் இருந்தது. மாதந்தோறும் வட்டி மட்டும், இரண்டு லட்சம் ரூபாய் கட்டி வந்தார். சேர்ந்து வாங்கிய இடத்தை விற்றோ அல்லது பிரித்தோ தருமாறு ராஜ்குமார் கேட்டார். ஈஸ்வரமூர்த்தி மறுத்தார். இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரை ராஜ்குமார் கொலை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை