உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  புதிய தொழிலாளர் சட்டம்; டீசா முகாமில் விளக்கம்

 புதிய தொழிலாளர் சட்டம்; டீசா முகாமில் விளக்கம்

திருப்பூர்: 'டீசா' சார்பில், புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்த பயிற்சி முகாம், சங்க அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. திருப்பூர் திறன்வாய்ந்த ஏற்றுமதி அலுவலர் சங்கம் (டீசா)பயிற்சி முகாமிற்கு, சங்க தலைவர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். பயிற்சியாளர்கள் சேஷாத்திரி, தினேஷ் ஆகியோர், தொழிலாளர் சட்டம் குறித்து விளக்கினர். சம்பள அமைப்பின் மாற்றங்கள், வேலை நேரம் மற்றும் 'ஓவர்டைம்', நியமன கடிதம், இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., மாற்றம், பணியாளர் ஓய்வூதியம், பணியாளர் இழப்பீடு மாற்றங்கள், தொழிற்சங்கம் மற்றும் முக்கிய சட்ட திருத்தம் குறித்து விளக்கி பேசினர். தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர், மனிதவள வல்லுனர்களுக்கான புதிய மாற்றங்கள் மற்றும் சவால்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை