உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயன்பாடு இல்லாத சுகாதார வளாகங்கள்

பயன்பாடு இல்லாத சுகாதார வளாகங்கள்

உடுமலை:உடுமலை ஒன்றியத்தில், பெரும்பாலான ஊராட்சிகளில் மகளிர் சுகாதார வளாகங்கள் பராமரிப்பின்றி பயன்படுத்தமுடியாத நிலையில் காணப்படுகிறது. அவற்றை புதுப்பிக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை ஒன்றியம் எலையமுத்துார் கிராமத்தில், 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். பெண்களுக்காகவும், சுகாதார மேம்பாட்டுக்காகவும், கிராமத்தில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.கழிப்பிடம், துணி துவைக்க தேவையான தண்ணீர் தொட்டி உட்பட வசதிகளுடன் இந்த வளாகம் கட்டப்பட்டது.ஆனால், வளாகத்துக்கு தண்ணீர் இணைப்பு கொடுக்காதது மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால், பயன்பாடு இல்லாமல், பூட்டப்பட்டது. மேலும், வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விட்டது.இதனால், சமூக விரோதிகள் இரவு நேரங்களில், அப்பகுதியை 'பார்' ஆக மாற்றி விடுகின்றனர். படிப்படியாக கட்டடம் சிதிலமடைந்து பரிதாப நிலையில் காணப்படுகிறது.மகளிர் சுகாதார வளாகத்தின் பராமரிப்புக்கு, பல முறை ஒதுக்கப்பட்ட நிதியும் வீணடிக்கப்பட்டுள்ளது. உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர், மகளிர் சுகாதார வளாகத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதே போல், உடுமலை ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான ஊராட்சிகளில், மகளிர் சுகாதார வளாகங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. இதனால், கிராம மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.அவற்றை, ஒன்றிய பொதுநிதியின் கீழ் புதுப்பிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒன்றிய நிர்வாகமும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ