நாவல் அறிமுக விழா
பதியம் இலக்கிய அமைப்பு சார்பில், திரைப்பட இயக்குனர் கீரா எழுதிய குமரி என்ற நாவல் அறிமுக நிகழ்ச்சி, லயன்ஸ் கிளப் அரங்கில் நடந்தது.எழுத்தாளர் சும்சுதீன் ஹீரா தலைமை வகித்தார். திருப்பூர் குமார் வரவேற்றார். நாவலாசிரியர் சிவராஜ், முருகேசன், ஜானகி, சம்பத்குமார், நிதர்சனா, கேசவன் முன்னிலை வகித்தனர். பாரதிவாசன் ஒருங்கிணைத்தார். தமிழர் முன்னணி நிர்வாகி சரவணன், புத்தக ஆய்வாளர் ரூபஸ்ரீ, வழக்கறிஞர் உமர்கயான் ஆகியோர், 'குமரி' நாவல் குறித்து பேசினர். நிறைவாக, நுாலாசிரியர் கீரா, பேசினார். 'மொபைல் போன் எனும் கொல்லும் அரக்கன்' என்ற குறும்படம் வாயிலாக தமிழக அரசு மூலமாக ஜெர்மன் நாட்டுக்கு சுற்றுலா சென்று வந்த, அரசு பள்ளி மாணவர் லோகராஜேஸ் மற்றும் குடும்பத்தினர் பாராட்டி, கவுரவிக்கப்பட்டனர்.