உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாயன்மார்கள் இல்லம் சென்ற நம்பெருமான்!

நாயன்மார்கள் இல்லம் சென்ற நம்பெருமான்!

அவிநாசி : நாளை நடைபெற உள்ள கும்பாபிேஷக பெருவிழாவை முன்னிட்டு, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் யாகசாலை பூஜைகள் விமரிசையாக நடந்து வருகிறது.நேற்று காலை, நான்காம் கால வேள்வி பூஜைகளை தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் அருளாசி வழங்கினர்.

சிவநெறியே நற்கதி தரும்

மயிலாடுதுறை சுவாமிநாத சிவாச்சாரியார்: பூமியில் வாழும் அனைத்து உயிர்களும் சுபிட்சமாக வாழ, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிேஷகம் நடக்க வேண்டும். இறைவனுக்கும், நமக்கும் உள்ளே பந்தத்தை, பல்வேறு திருமுறைகள் கூறுகின்றன.இறைவன் திருவருளை பெற, சிவனடியார்களை வணங்க வேண்டும். சைவம் என்பது சிவனையும், அடியார்களையும் வணங்குவது. வேதம், ஆகமங்கள், தத்துவார்த்த செய்திகளை, நமது ஆச்சார்ய பெருமக்கள் அருளியிருக்கின்றனர். திருமுறைகள் என்பது தெய்வீக கலை.கும்பாபிேஷக விழா, அமைதியாகவும், விமரிசையாகவும் நடந்து வருகிறது. அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீட்டுக்கு சென்று, அவர்களை இறைவனே உலகிற்கு அடையாளப்படுத்தினார். சிவநெறியை பின்பற்றி, நற்கதி பெறலாம்.

பாவம் போகும்...புண்ணியம் வரும்

கூனம்பட்டி திருமடம் ஸ்ரீநடராஜ சுவாமி:அவிநாசியப்பர் கோவில் கும்பாபிேஷகம் வெகு விமரிசையாக நடந்து கொண்டுஇருக்கிறது. அற்புதமக நடந்து வரும் நான்காம் கால வேள்வியில், சிவாச்சாரியார்கள் வேத ஆகமங்களை ஓதினர்; ஓதுவாமூர்த்திகள் திருமுறைகளைபாடி விண்ணப்பம் செய்தனர். அவிநாசியே விழாக்கோலம் பூண்டுள்ளது.கும்பாபிேஷகத்தில் பங்கேற்பது அளவில்லாத புண்ணியத்தை வழங்கும். புராதன புகழ்வாய்ந்த, பாடல்பெற்ற தலங்களில் திருப்பணி செய்து, வழிபாடு நடத்துவதில் கிடைக்கும் புண்ணியமே உயர்ந்தது. இயன்றவரை, பழமை வாய்ந்த, சிறப்பு வாய்ந்த பாடல் பெற்ற தலங்களில் திருப்பணி செய்து, நித்ய வழிபாடு நடக்க வழிவகை செய்ய வேண்டும்.சுந்தரமூர்த்தி நாயனார், சிவபெருமானும் நண்பனாக பழகினார். 'முதலை உண்ட பாலகனை தரச்சொல்லு காலனையே,' என சுவாமிக்கு உத்தரவிட்டார். சுவாமியும், அவ்வாறே செய்தார்.இத்தகைய பெருமை வாய்ந்த அவிநாசி கோவில் கும்பாபிேஷகத்தில் பங்கேற்பது, பாவத்தை போக்கி, புண்ணியத்தை வழங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி