உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 15 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா ஆசாமி கைது

15 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா ஆசாமி கைது

திருப்பூர்;ஒடிசாவிலிருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்த நபரை மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.நேற்று முன்தினம் இரவு திருப்பூர் ஆத்துப்பாளையம் மின் மயான ரோட்டில் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி, எஸ்.ஐ., கென்னடி மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு டிராவல் பேக்குடன் வந்த நபரைப் பிடித்து சோதனையிட்டனர். அதில், 15 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிந்தது.விசாரணையில், ஒடிசாவைச் சேர்ந்த சந்தோஷ் சாகுல், 38, என்பதும் பெருமாநல்லுார் அருகே தங்கி, பனியன் நிறுவனத்தில் டெய்லர் வேலை செய்வதும் தெரிந்தது. கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த, 3 ஆண்டாக திருப்பூரில் வசித்து வந்த அவர், கடந்த மாதம் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து ரயிலில் திருப்பூர் வரும் போது கஞ்சாவை கொண்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை