உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கன மழையால் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு

கன மழையால் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு

உடுமலை:உடுமலை மற்றும் திருமூர்த்திமலை, அமராவதி மலைப்பகுதிகளில், கடந்த, 8 மற்றும், 9ம் தேதிகளில் கனமழை பெய்தது.இதனால், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களிலுள்ள, சின்னாறு, குழிப்பட்டி, குருமலை, திருமூர்த்திமலை உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளிலுள்ள, அம்மக்களின் குடிசை வீடுகள் கன மழைக்கு தாங்காமல் சேதமடைந்தன.அதே போல், திருமூர்த்திமலை மத்தளப்பள்ளம் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, ரெட்டிபாளையம் முதல் பாலாறு துறை வரையிலான ரோட்டில், ஓடையின் குறுக்கே அமைந்திருந்த ரோடு அடித்துச்செல்லப்பட்டது.இந்நிலையில், கனமழையால் சேதமடைந்த, ரோடு, தடுப்பணைகள் மற்றும் மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை, உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் வெள்ள சேதம் குறித்து நேற்று ஆய்வு செய்தனர்.அரசுக்கு அறிக்கை அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !