உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரத்தின் மீது கார் மோதல்: ஒருவர் பலி; ஐவர் காயம்

மரத்தின் மீது கார் மோதல்: ஒருவர் பலி; ஐவர் காயம்

திருப்பூர்:பழநி கோவிலுக்கு சென்று திரும்பும் போது, காங்கயத்தில் மரத்தின் மீது ஆம்னி கார் மோதியதில் ஒருவர் இறந்தார்; ஐந்து பேர் காயமடைந்தனர்.நாமக்கல் மாவட்டம், பெரியமணாலியை சேர்ந்த பொன்னுசாமி, 37, அண்ணாதுரை, 47, முத்துசாமி, 32, கொண்டான், 55, மவுனிஷ், 10, மவுனிகா, 7 ஆகிய, ஆறு பேரும் மாருதி ஆம்னி காரில் பழநி முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். அதன்பின், இரவு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். 11:30 மணிக்கு காங்கயம், வரதப்பம்பாளையம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த வேப்பமரம் மீது அதிவேகமாக மோதியது. காயமடைந்த அனைவரையும் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.காயமடைந்தவர்களில் அண்ணாதுரை இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ