உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆன்லைன் வாயிலாக நாளை வாக்காளர் வினாடி - வினா

ஆன்லைன் வாயிலாக நாளை வாக்காளர் வினாடி - வினா

உடுமலை;தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாளை (21ம் தேதி), 'இந்தியாவில் தேர்தல்கள்' எனும் தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு வினாடி - வினா போட்டி ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தலில் வாக்களிக்கும் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்த இப்போட்டி நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மட்டுமின்றி, ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். நாளை (21ம் தேதி) காலை, 11:00 முதல், 11:15 மணி வரை வினாடி - வினா போட்டி ஆன்லைன் வாயிலாகவே நடக்கும்,' என்றார்.மேலும் தகவல்களுக்கு, 1800 4252 1950 அல்லது உதவி மையத்தை, 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை