திருப்பூர்: திறமையான தடகள வீராங்கனைகளை கண்டறிய, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 'அஸ்மிதா அத்லெடிக் லீக்' என்ற பெயரில், தடகள போட்டிகளை நடத்துகிறது. திருப்பூர் மாவட்ட அளவிலான தடகள போட்டி, காலேஜ் ரோடு, எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் தடகள சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். இணைச் செயலாளர்ராமகிருஷ்ணன் வரவேற்றார். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளைத் துவக்கி வைத்தார். 14 மற்றும், 16 வயது பிரிவினருக்கான போட்டியில், 126 பேர் பங்கேற்றனர். முதலிடம் பெற்றவர்கள்பதிநான்கு வயது 'டிரையத்லான் ஏ' போட்டியில், முதலிடம் ஜெனிதா (ரைசிங் ஸ்டார் அகாடமி), 'டிரையத்லான் பி' போட்டியில், பூர்விகா கிருஷ்ணன் (வேலவன் பள்ளி), 'டிரையத்லான் சி' போட்டியில், ஸ்ரீவித்யா (ஆக்ஸ்போர்டு பள்ளி). கிட்ஸ் ஜாவலின் போட்டி, ஹர்ஷிதா (வித்ய விகாஸ் பள்ளி). பதினாறு வயது பிரிவு, 60 மீ ஓட்டம் பிரேமா (பார்ன் டு ரன் அகாடமி), 600 மீ. ஓட்டம் மதுஸ்ரீ (கருவலுார் ஸ்போர்ட்ஸ் அகாடமி), உயரம் தாண்டுதல் ஷைனி (ரைசிங் ஸ்டார் அகாடமி), நீளம் தாண்டுதல் சாருஹாஷினி (போல்ட் அகாடமி), வட்டு எறிதல் சலோமி (ராஜா நேஷனல் பள்ளி), குண்டு எறிதல் ஜெசிகா (வித்ய விகாஸ் பள்ளி). ஈட்டி எறிதல் ஸ்ரீ சபரீசா (அபிலாஷ் த்ரோயிங் அகாடமி) வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தடகள சங்க டெக்னிக்கல் கமிட்டி சார்பில், 27 நடுவர்கள் போட்டியை ஒருங்கிணைந்து நடத்தினர்.