உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லடம் இயற்கை விவசாயி நம்மாழ்வார் விருதுக்கு தேர்வு

பல்லடம் இயற்கை விவசாயி நம்மாழ்வார் விருதுக்கு தேர்வு

பல்லடம்:பல்லடம் பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர், தமிழக அரசின் நம்மாழ்வார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தமிழக அரசு வேளாண் உழவர் நலத்துறை சார்பில், வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2023--24ம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருதுக்கு, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், மகர்நோன்பு சாவடியை சேர்ந்த விவசாயி சித்தர் என்பவருக்கு முதல் பரிசும், பல்லடம் அடுத்த கேத்தனுாரை சேர்ந்த பழனிசாமிக்கு இரண்டாம் பரிசும், காஞ்சிபுரம் மாவட்டம், அச்சுக்கட்டு கிராமத்தை சேர்ந்த எழிலன் என்பவருக்கு மூன்றாம் பரிசும் கிடைத்துள்ளது. இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதுடன், பிற இயற்கை விவசாயிகளுக்கு கை கொடுத்து வரும் வகையில் செயல்பட்டு வருவதற்காக, இயற்கை விவசாயிகள் மூவருக்கும், 'நம்மாழ்வார் விருதுடன்' பரிசுத்தொகை, சான்று மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ