உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பிரதான ரோட்டில் வாகனங்கள் நிறுத்தம்

 பிரதான ரோட்டில் வாகனங்கள் நிறுத்தம்

உடுமலை: உடுமலையில், பொள்ளாச்சி ரோட்டில், கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகிறது. உடுமலையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் ரோட்டில், தீயணைப்பு நிலையம், ஒழுங்கு முறை விற்பனை கூடம், வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகம் மற்றும் தனியார் மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் அதிகளவு உள்ளன. இந்த ரோட்டில் போக்குவரத்து அதிகளவு உள்ள நிலையில், அரசு அலுவலகங்களுக்கு செல்லும் வழித்தடத்தை மறித்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால், ரோடு குறுகலாகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே, போக்குவரத்து போலீசார், ரோட்டை ஆக்கிரமித்து கனரக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை