உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிகளுடன் அமைதி பேச்சு; ஆலை இயக்கத்தை நிறுத்த உத்தரவு

விவசாயிகளுடன் அமைதி பேச்சு; ஆலை இயக்கத்தை நிறுத்த உத்தரவு

பல்லடம்;பல்லடத்தில், விவசாயிகளுடனான அமைதி பேச்சு வார்த்தையை தொடர்ந்து, தனியார் ஆலையின் இயக்கத்தை நிறுத்த தாசில்தார் உத்தரவிட்டார்.பல்லடம் தாலுகா, வாவிபாளையம் கிராமத்தில் தனியார் தொட்டிக்கரி ஆலை செயல்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, கடும் மாசு ஏற்படுவதாக கூறி, இப்பகுதி விவசாயிகள், புகார் அளித்ததுடன், பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, நேற்று, பல்லடம் தாசில்தார் முன்னிலையில், தாலுகா அலுவலகத்தில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது.விவசாயிகள் கூறுகையில், 'தொட்டிக்கரி ஆலையால் பாதிப்பு ஏற்படுவதாக பலமுறை புகார் அளித்தும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகளின் உத்தரவை மீறி, ஆலை நிர்வாகம், கட்டுமான பணியை மேற்கொண்டு வந்தது. ஊராட்சி நிர்வாகத்திடம் கட்டட அனுமதி பெறாமலேயே கட்டுமான பணி நடந்து வருகிறது. மாசு ஏற்படுத்தி வரும் தனியார் ஆலைக்கு அனுமதி வழங்கக்கூடாது,' என்றனர்.தொடர்ந்து, தனியார் ஆலை நிர்வாகிகளிடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் 'அனுமதி இன்றி எந்த ஒரு கட்டுமான பணியையும் மேற்கொள்ளக்கூடாது. அதுவரை ஆலையின் இயக்கமும் நடைபெற கூடாது,' உத்தரவிட்டார். இதனால், விவசாயிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி