உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆயுத கலாசாரம் கட்டுப்படுத்த மனு

ஆயுத கலாசாரம் கட்டுப்படுத்த மனு

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், தலைதுாக்கியுள்ள ஆயுத கலாசாரத்தை, வேருடன் கிள்ளி எறிவது அவசியம் என்று, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர், கலெக்டரிடம் மனு அளித்தனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், தனியார் 'டிவி' நிருபரை, கூலிப்படை சரமாரியாக வெட்டி தப்பியது. இருவர் மட்டுமமே இதுவரை சிக்கியுள்ளர்.இச்சம்பவத்துக்கு, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தலைதுாக்கியுள்ள ஆயுத கலாசாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்த, பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் அனுமதி பெறாத மதுபான பார்கள் அதிக எண்ணிக்கையில் செயல்படுகின்றன. இதுகுறித்து தட்டிக்கேட்போர் மீது, கூலிப்படையினரைக்கொண்டு தாக்குதல் நடத்து கின்றனர். அவ்வாறே, பல்லடத்தில், தனியார் 'டிவி' நிருபர் மீது, கூலிப்படையினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும். நிருபரின் மருத்துவ சிகிச்சை செலவு முழுவதையும் அரசே ஏற்கவேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் தலைதுாக்கியுள்ள ஆயுத கலாசாரத்தை, போலீசார் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி