உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மருந்தக உரிமையாளர் கொலை: வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

மருந்தக உரிமையாளர் கொலை: வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

அனுப்பர்பாளையம்:மருந்தக உரிமையாளர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, குன்னத்துாரில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.செங்கல்பட்டு மாவட்டம், மண்ணிவாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பணம் தராததால், மருந்தக உரிமையாளர் வினோத், என்பவர் ரவுடிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இதனை கண்டித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில், தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குன்னத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஆத்தி செல்வம் தலைமை வகித்தார். செயலாளர் மகிஷா சிவக்குமார், முன்னிலை வகித்தார்.குன்னத்துார் பகுதி வியாபாரி சங்க தலைவர்கள் ஸ்டீபன் ராஜ், ஜெயம் ராஜா, கதிர்வேல், பூபதி, காமராஜ், மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில தலைவர் பூமிநாதன், செயலாளர் வேலாயுதம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் உடுமலை கிளை தலைவர் மகாராஜன், செயலாளர் சின்னத்துரை, பொருளாளர் பொன்ராஜ், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.கொல்லப்பட்ட மருந்தக உரிமையாளரின் குடும்பத்திற்கு அரசு ஒரு கோடி ரூபாய் நிதி மற்றும் அரசு வேலை வழங்க கோரியும், வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி