உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சென்னிமலையில் இருந்து பழநி நோக்கி வேல் வழிபாடு

சென்னிமலையில் இருந்து பழநி நோக்கி வேல் வழிபாடு

திருப்பூர்:சென்னிமலையில் இருந்து பழநி மலை நோக்கி வேல் வழிபாடு இன்று நடக்கிறது.இதுகுறித்து வேல் வழிபாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் சண்முகம் கூறியதாவது:குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது நமது முன்னோர் வாக்கு. அத்தகைய குன்றுகளை குறிவைத்து திட்டமிட்டு பல சதி செயல்கள் நடக்கின்றன. அவற்றை முறியடிக்க முருக பக்தர்களாகிய நமக்கு சக்தி கிடைக்க, 'நம்ம சாமி, நம்ம கோவில், நம்ம வழிபாடு' காக்க, சென்னிமலையிலும், பழநி மலையில் மாபெரும் வேல் வழிபாடு இன்று நடக்கிறது.சென்னிமலையில் முருக பக்தர்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபாடு செய்த வேலுடன் ஜன., 1ல்(இன்று) காலை, 5:00 மணிக்கு சென்னிமலை ஆண்டவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. காலை, 8:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 3:00 மணிக்கு பழநிக்கு தங்களது வாகனங்களில் சென்று அங்கு சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது.நமது வீட்டில் வழிபாடு செய்யப்பட்ட வேலினை சென்னிமலைக்கும், பழநிக்கு சென்று வழிபாடு செய்வது முருகப்பெருமானை மகிழ்விக்கும் செயலாகும். இதன் மூலம் கஷ்டங்கள் எல்லாம் நீங்கி நமது வாழ்வில் செல்வ செழிப்பு உண்டாகும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை