உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 6.30 லட்சம் குடும்பத்துக்கு பொங்கல் பரிசு வழங்கியாச்சு

6.30 லட்சம் குடும்பத்துக்கு பொங்கல் பரிசு வழங்கியாச்சு

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மாலை வரை, 6.30 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.ரேஷனில் அரிசி பெறும் கார்டுதாரர்களுக்கு, ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 7 லட்சத்து 97 ஆயிரத்து 852 அரிசி கார்டுகளுக்கு பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்படுகிறது.மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,135 ரேஷன் கடைகளிலும், கடந்த 10ம் தேதி முதல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட்டுவருகிறது. டோக்கன் வழங்கப்பட்டோர் மட்டுமின்றி டோக்கன் பெறாத தகுதியுள்ள கார்டுதாரர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.நேற்று மாலை வரை, மொத்தம் 6 லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களுக்கு பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மொத்த அரிசி கார்டுதாரர்களில், 78.96 சதவீதம்பேர் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுள்ளனர்.ரேஷன் கடைகளில், இன்றும், நாளையும் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. விடுபட்டோர், நாளை ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை