உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் இணைப்பு துண்டிப்பு

மின் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர்: கருவலுார் ஊராட்சி, கானுர் ரோட்டில், வடபத்திரகாளியம்மன் கோவில் உள்ளது.பழமையான இக்கோவில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, கருவலுார் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் குழந்தைவேலு உத்தரவின் பேரில், மூன்று மாதம் முன், மின் இணைப்பு வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் கோவிலுக்கான மின் இணைப்பை சமூக விரோதிகள் துண்டித்துள்ளனர். அப்பகுதி மக்கள், அவிநாசி போலீசில் புகார் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !