உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பச்சை மிளகாய் விலை காரம் பிற மாநில வரத்து சரிவு

பச்சை மிளகாய் விலை காரம் பிற மாநில வரத்து சரிவு

உடுமலை;பருவமழையின் தாக்கம் காரணமாக, தேவை அதிகரித்து, பச்சை மிளகாய் விலை சந்தையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு ஆண்டு முழுவதும், பச்சை மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.குறிப்பாக, பாப்பனுாத்து, குட்டியகவுண்டனுார், எலையமுத்துார், கணக்கம்பாளையம், ஜக்கம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில், சொட்டு நீர் பாசனம் அமைத்து, இச்சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.இங்கு விளைவிக்கப்படும் பச்சை மிளகாயை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். நடப்பு சீசனில், உடுமலை சந்தைக்கு, பச்சை மிளகாய் வரத்து அதிகரித்தும், விலை சரியவில்லை.மாறாக, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநில வரத்து குறைந்து, உள்ளூர் தேவை அதிகரித்துள்ளதால், சந்தையில் விலையும் அதிகரித்து வருகிறது.கடந்த வாரம், பச்சை மிளகாய் விலை, 40 - 50 ரூபாயாக இருந்தது. நேற்றைய நிலவரப்படி, கொள்முதல் விலை கிலோவுக்கு, 50 - 67 ரூபாய் இருந்தது.விவசாயிகள் கூறுகையில், 'சொட்டு நீர் பாசனம் மற்றும் இதர தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால், அனைத்து சீசனிலும், பச்சை மிளகாய் சாகுபடியில், சிறந்த மகசூல் பெற முடிகிறது. தனியார் நாற்று பண்ணைகளில் இருந்து, நாற்றுகளாக வாங்கி நடவு செய்கிறோம். இடுபொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. தற்போது சந்தையில், கொள்முதல் விலை அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ