உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூசாரி கொலை வழக்கு; வாலிபருக்கு ஆயுள்

பூசாரி கொலை வழக்கு; வாலிபருக்கு ஆயுள்

திருப்பூர் : திருப்பூர் ஆத்துப்பாளையம் ரோடு வெங்கமேட்டில் கன்னிமார் கருப்பராயன் கோவில் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த சுப்ரமணி, 72 என்பவர் பூசாரியாக இருந்தார். கடந்த, 2022 டிச., 16ம் கோவிலில் துாங்கி கொண்டிருந்த பூசாரியின் தலையில் கல்லை போட்டு கொன்று, எண்ணெய் ஊற்றி துணிகளை போட்டு தீ வைத்து மர்ம நபர் சென்றனர்.கொலை தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்தனர். திருப்பூர் அமராவதிபாளையத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வந்த சதீஷ்குமார், 33 என்பவர், கோவில் உண்டியலில் திருட சென்ற போது, பூசாரியை கொன்றது தெரிந்தது. அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இக்கொலை வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றவாளி சதீஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுவர்ணம் நடராஜன் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ