திருப்பூர்:கணக்கெடுப்பில் விடுபட்ட மாற்றுத்திறனாளிகள், களப்பணியாளர்களை தொடர்புகொண்டு விவரங்கள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை வழங்கும் வகையில், மாற்றுத்திறனாளிகள் உரிமை திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த நவ., 29ம் தேதி முதல், கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. களப்பணியாளர்கள், வீடு வீடாக சென்று, மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை பெற்று, 'மொபைல் ஆப்'-ல் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.கணக்கெடுப்பில் விடுபட்ட மாற்றுத்திறனாளிகள், சுயமாகவோ, தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், களப்பணியாளர்களை தொடர்புகொண்டு விவரங்கள் தெரிவிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக களப்பணியாளர்களின் தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. உடனே அழையுங்க...
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகள், முதல் மண்டலம் - 99446 75056, 70105 63770. 2ம் மண்டலம் - 79049 09562, 80563 39067, 979122 83857. மூன்றாம் மண்டலம் - 80151 38985, 80722 30161. 4ம் மண்டலம் - 99761 91343.பல்லடம் நகராட்சி- 97150 15937, திருமுருகன்பூண்டி நகராட்சி - 98942 08530, அவிநாசி - 9894208530, காங்கயம் நகராட்சி - 98949 92798. அவிநாசி ஒன்றியம் - 88831 09082, திருப்பூர் ஒன்றியம் - 90955 34743, பொங்கலுார் - 96988 57633, பல்லடம் ஒன்றியம் - 88381 62465, தாராபுரம் ஒன்றியம் - 99650 63377.