மேலும் செய்திகள்
தாறுமாறு வாகனங்கள் தடுமாறும்
16-Dec-2024
அரைகுறை பணிதிருப்பூர், எஸ்.ஆர்., நகர் தெற்கு, விவேகானந்தர் ஏழாவது வீதியில் பைப் பதிக்க தோண்டிய குழியை சரிவர மூடவில்லை. அப்படியே விடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- ராஜவேல், எஸ்.ஆர்., நகர். (படம் உண்டு)முட்புதரை அகற்றலாமே!திருமுருகன்பூண்டி மேம்பாலத்தின் கீழ் முட்புதர் நிறைந்து காணப்படுகிறது. கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. முட்புதர்களை அகற்றி, ஓடையை சுத்தம் செய்ய வேண்டும்- ஆறுமுகம், திருமுருகன்பூண்டி. (படம் உண்டு)ஆக்கிரமிப்பை அகற்றுங்க...அவிநாசி ரோடு - பி.என்., ரோடு, இணைப்பு சாலையாக உள்ள சரவணா வீதியில், புதிய கான்கீரிட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தாமல், தடுப்பு கற்கள் வைத்து அடைத்து வைத்துள்ளனர்.- முத்துக்குமார், லட்சுமிநகர். (படம் உண்டு)அவிநாசி - புதிய திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் கீழ், தெருவோர கடைகள் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்படுகிறது. வளைவில் திரும்பும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.- சந்திரசேகர், புதிய திருப்பூர். (படம் உண்டு)சறுக்கும் சாலைதிருப்பூர், கூலிபாளையம் - வாவிபாளையம் ரிங்ரோடு சேதமாகி, குண்டும் குழியுமாக உள்ளது. தார் பெயர்ந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.- விஜி, கூட்டுறவுநகர். (படம் உண்டு)காத்திருக்கும் ஆபத்துதிருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, மாரியம்மன் கோவில் வீதி, ரயில் பாலம் அருகே சாலை சேதமாகி, குழியாகி விட்டது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விடுகின்றனர். குழியை மூடி சாலையை சீரமைக்க வேண்டும்.-- சித்தரஞ்சன், பாளையக்காடு. (படம் உண்டு)திருப்பூர், மாநகராட்சி ஐந்தாவது வார்டு, அங்கேரிபாளையம் கிழக்கு வீதியில், சாக்கடை கால்வாய் கட்ட குழி தோண்டப்பட்டது. பணி முடிந்த பின் சாக்கடை ஒட்டிய குழிகள் அப்படியே விடப்பட்டுள்ளது.- உமா, அங்கேரிபாளையம். (படம் உண்டு)ரியாக் ஷன்குழியை மூடிட்டாங்க...திருப்பூர், 50 வது வார்டு, கரட்டாங்காடு பகுதியில் கேபிள் லைன் பதிக்க தோண்டிய குழியை சரிவர மூடவில்லை என தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. குழியை மண் கொட்டி மூடியுள்ளனர்.- ராஜேந்திரன், கரட்டாங்காடு. (படம் உண்டு)தெருவிளக்கு 'பளிச்'திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையம் - ராயபுரம் தீபம் பாலம் சந்திப்பில், தெருவிளக்கு எரியாமல் இருப்பதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தெருவிளக்கு சரிசெய்யப்பட்டு பளிச்சிடுகிறது.- ராஜா, பாரப்பாளையம். (படம் உண்டு)உடைப்பு சீரமைப்புதிருமுருகன்பூண்டி ரிங்ரோடு, இ.எஸ்.ஐ., மருத்துவமனை முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டுள்ளது.- விஜிலட்சுமி, திருமுருகன்பூண்டி. (படம் உண்டு)குப்பை அள்ளிட்டாங்க...பெத்திசெட்டிபுரம் முதல் வீதி, நொய்யல் செல்லும் வழியில் இறைச்சிக்கழிவு, குப்பை கொட்டப்படுவதாக தினமலர் நாளிதழில் செய்ததி வெளியானது. மாநகராட்சி ஊழியர்கள் மூலம் குப்பை அள்ளப்பட்டு விட்டது.- பாலு, பெத்திசெட்டிபுரம். (படம் உண்டு)
16-Dec-2024