உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லுாரி ஆண்டு விழா

ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லுாரி ஆண்டு விழா

திருப்பூர்;திருப்பூரில் ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லுாரி, 25ம் ஆண்டு விழா, முப்பெரும் விழா நடந்தது. மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். கல்லுாரி தாளாளர் கீதா தங்கராஜன் குத்து விளக்கேற்றி, விழாவை துவக்கி வைத்தார். ஆசிரியர் பொன்ராம் வரவேற்றார். ஆசிரியை பவித்ரா ஆண்டறிக்கை வாசித்தார். கடந்த கல்வியாண்டில் எட்டு, பத்து மற்றும் பிளஸ் 2வில் முதல் மூன்று இடங்களை பெற்ற, மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.கம்மாளர் கவின் கலை கல்வி கழக நிறுவனர் குருஜெயச்சந்திரன், கல்லுாரி முதல்வர் தங்கராஜன் சிறப்புரை ஆற்றினர். கட்டுரை, ஓவியம், பேச்சு, கோலம், கவிதை, கபடி போட்டி நடத்தப்பட்டது. மெட்ரோ அறக்கட்டளை துணைத் தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ