உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிவ பெருமானுக்கு ருத்ராபிேஷக பூஜை

சிவ பெருமானுக்கு ருத்ராபிேஷக பூஜை

உடுமலை;உடுமலை காந்திநகர், வரசித்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு, நேற்றுமுன்தினம் காலை, 7:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, கோபூஜை, பஞ்சகவ்ய பூஜைகளுடன் ருத்ராபிேஷக பூஜைகள் துவங்கின.ருத்ர ஹோமம், கலச அபிேஷகம், ஜெபம் முழங்க, வாசனை தைலம், பஞ்சாமிர்தம், பால், நெய், தயிர், தேன், கரும்புச்சாறு, இளநீர், சந்தனம், பஞ்ச கவ்யம் ஆகிய, 11 வகை திரவியங்களில், சிவபெருமானுக்கு அபிேஷகம் நடந்தது.ஒவ்வொரு அபிேஷகத்தின் போதும், செம்பருத்திப்பூ, மகிழம்பூ, அரளிப்பூ, ஜாதி மல்லி, மல்லிகை, முல்லை, தாமரை, தெச்சி மந்தாரை, நந்தியாவட்டை, பவளமல்லி, வில்வ இலை ஆகியவற்றை கொண்டு பூஜைகள் நடந்தன.மேலும், விளாம்பழம், கொய்யா, மாம்பழம், வெள்ளரிப்பழம், ஆரஞ்ச், ரஸ்தாளி பழம், மாதுளை, சாத்துக்குடி, திராட்சை, தேங்காய், செவ்வாழை கனிகள் கொண்டு, 11 வகை நைவேத்தியங்கள் படைத்தும், சிவாச்சார்யார்கள் 11 பேர் ருத்ர ஜெபம் வாசிக்க பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை