உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அறிவுடையோரை கண்டாலே நமக்குள் பெரும் மாற்றம்

அறிவுடையோரை கண்டாலே நமக்குள் பெரும் மாற்றம்

''அறிவு உள்ளோரை சிந்திப்பதும், காண்பதுமே நமக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும்,'' என்று கூறுகிறார், முன்னாள் தலைமைச்செயலாளர் இறையன்பு.திருப்பூர் புத்தகத் திருவிழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது:நாம் எப்போது நல்லவற்றை மட்டும் நினைக்க வேண்டும். நமக்கு நேரும் இன்னல்களை பெரிதாக்க கூடாது. திருவள்ளுவர் கூறியதை ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எப்போதும், இனியவற்றை காண, பேச வேண்டும். அந்த காலத்தில் எழுதப்பட்ட பல நுால்கள், வாழ்க்கை மறுதலிப்பாக இருந்தது.ஆனால், திருவள்ளுவர் தான் வாழ்க்கை நம்பிக்கைக்கு உரியது என்று குறிப்பிட்டார். வறுமையை காட்டிலும் கொடியது எது; வறுமை தான். வறுமை இருப் பவன் தன்னுடைய துன்பங்களை தேர்ந் தெடுப்பதற்கான வாய்ப்பு இல்லை. வளமை இருப்பவர்கள் தங்கள் துன்பத்தை கூட தேர்ந்தெடுக்கலாம்.எப்படி என்றால், வீட்டிலே மரணமடையலாமா, வசதியான இடத்தில் மரணமடையலாமா என்று. வாழ்க்கையை உடன்பாடு கொள்கின்ற மனிதன் தான், வாழ்க்கையை சில காலமாவது மகிழ்ச்சியோடு இருக்க முடியும். பெறுகின்ற மகிழ்ச்சி நிலைத்து இருக்க வேண்டும். தவறான வழிகளில் பெறக்கூடிய மகிழ்ச்சி நிலைத்து இருக்காது.நாம் பல பேரை பார்க்கலாம். தாங்கள் செய்யும் பணியை கூட குறைவாக சொல்வார்கள். எங்கே பணியாற்றுகிறீர்கள் என்று கேட்டால், ஒரு அலுவலகத்தை சொல்லி, அங்கே குப்பை கொட்டுகிறேன் என்று சொல்வார். நாம் குப்பை கொட்டுபவர்களை கூட, துாய்மை பணியாளர்கள் என்று கவுரவத்தை தருகிறோம்.குப்பை அள்ளுபவர்கள் கூட மனமகிழ்ச்சியோடு குப்பைகளை எடுப்பதை வீதியில் நான் அன்றாடம் பார்க்கிறேன். அவர்கள் மனதில் துாய்மை இருக்கிறது. நம் தெருவிலே குப்பை இருக்கிறது. சிலர் அப்படி சொல்வதற்கு காரணம், இனியவற்றை காண தயாராக இல்லை என்பது தான்.தனியாக இருக்கும் போது வாழ்க்கையை தரிசிக்கிறீர்கள். எப்போதும் மனிதர்களோடு இருக்கும் போது, சப்தங்களுக்கு இடையே வாழ்கின்றீர்கள். மவுனத்தை ஒருபோதும் தரிசிப்பதில்லை. தனியாக இருக்கும் போது, பல சிந்தனைகள் ஏற்படுகின்றன. நம்மை நாமே விசாரிக்கிறோம்.நம் அனுபவங்களை மறுபரிசீலனை செய்கிறோம். நம் செயல்கள் சரியா என்று, நம்மை நாமே உரசி பார்க்கிறோம். அதனால், தனிமை சிறந்தது. நம் சிந்தனை முழுவதும் அறிவை நோக்கி இருக்கும் போது, எவ்வித கவனச்சிதறலுக்கும் ஆளாக மாட்டோம். அதுமட்டுமல்ல, அறிவு என்பது நாமாக தேடி பெறுவதில்லை. மற்றவர்களிடம் இருந்து பெறுவது தான்.ஒவ்வொன்றையும் யாரோ கற்று கொடுத்தனர். நம் பெற்றவை அனைத்தும், மற்றவர்களிடம் இருந்து கற்றவை தானே என்பதை உணர வேண்டும். அறிவு உள்ளோரை சிந்திப்பதும், காண்பதுமே நமக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.இவ்வாறு, அவர் பேசினார்.மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள்!இறையன்பு பேசியதாவது:ஒரு மனிதன் அவன் வாழ்க்கையில் முன்னேறுவது என்பது பொருளாதாரத்தில் அல்ல. தந்தையை காட்டிலும், மகன் அறிவால் உயர்ந்திருக்கும் போது தான், வாழ்க்கை பயனுள்ளதாக இருக்கும். குறிஞ்சிபாட்டில், 99 மலர்களை குறிப்பிடுகிறார்கள் என்றால், எந்த அளவுக்கு வாழ்வை உற்றுநோக்கி உள்ளனர் என்பதை நாம் உணர முடியும். மனிதர்களை மன்னிக்க கற்றுக்கொண்டால், எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவும், வரும் துன்பங்களை சமாளிக்கவும், காண்பவற்றில் இனிமையை காண முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ