உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுற்றுச்சூழல் கல்வி பள்ளியில் கருத்தரங்கம்

சுற்றுச்சூழல் கல்வி பள்ளியில் கருத்தரங்கம்

திருப்பூர்;பள்ளி கல்வித்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பில், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'சுற்றுச்சூழல் கல்வித்திட்டம்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமை வகித்தார்.'சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான காதித பை தயாரிப்பு, கழிவுநீர் மேலாண்மை, பறவைகளுக்கான வாழ்வியல் சூழலை ஏற்படுத்துவது, காளான் வளர்ப்பு, காலநிலை மாற்றம் மற்றும் பருவநிலை மாறுபாடுகள்' உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கம் நடந்தது. துறை சார் வல்லுனர்கள் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை