உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பட்டு வளர்ப்பு கண்காட்சி

பட்டு வளர்ப்பு கண்காட்சி

திருப்பூர்;திருப்பூர் மாவட்ட பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில், பட்டு வளர்ப்பு கண்காட்சி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.மல்பெரி செடி, பட்டுப்புழு முட்டை, முதல், இரண்டு, மூன்று, நான்காம் நிலை பட்டுப் புழுக்கள், பட்டுக்கூடு, பட்டு நுாலிழை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. பட்டுப்புழு குறித்து விளக்கும் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு, பட்டு வளர்ப்பு குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை