உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் கடும் பஞ்சம்... கழிவுநீர் சாலையில் தஞ்சம்

குடிநீர் கடும் பஞ்சம்... கழிவுநீர் சாலையில் தஞ்சம்

திருப்பூர்;பொங்குபாளையம் ஊராட்சி,4வது வார்டுக்கு உட்பட்டது பள்ளிபாளையம். இதில் எஸ்.ஆர்.வி., கார்டன்ஸ் குடியிருப்பு பகுதி உள்ளது.இதில், 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியினர் சார்பில் குடிநீர் தொட்டி மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இது முறைப்படி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இப்பகுதிக்கு ஆறு மாதத்துக்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. இதனால், லாரிகளின் குடிநீர் வாங்கிப் பயன்படுத்தும் நிலை உள்ளது. சில சமயங்களில் 2 கி.மீ., துாரம் சென்று குடிநீர் பிடித்து வரும் நிலை உள்ளது.மேலும் முறையான கழிவுநீர் வடிகாலும் அமைக்கப்படாமல், ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், பாதையைப் பயன்படுத்த முடியாத நிலையும், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கோரி, கலெக்டரிடம் குறை கேட்பு நாளிலும் அப்பகுதியினர் மனு அளித்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை.அப்பகுதியினர் கூறியதாவது:வெளியூர் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் தான் இங்கு பெரும்பாலும் வீடு கட்டி வசிக்கிறோம். வார்டு கவுன்சிலர், ஊராட்சி தலைவர், செயலாளர் ஆகியோர் எங்கள் பகுதியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் அணுகுகின்றனர்.குடிநீருக்கு படும் சிரமம் குறித்து மாதக்கணக்கில் வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை. கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்பகுதிக்கு எதுவும் செய்ய முடியாது என ஊராட்சி நிர்வாகம் கை விரித்து விட்டது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை