உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிலம்ப பயிற்சியாளர் - கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கி ஊக்குவிப்பு

சிலம்ப பயிற்சியாளர் - கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கி ஊக்குவிப்பு

தமிழர்களின் வீர விளையாட்டுகளில், சிலம்பத்துக்கு, தனியிடம் உண்டு. முந்தைய காலங்களில் கோவில் விழாக்களில் இடம் பெறும் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் சிலம்பாட்டம், கண்டிப்பாக இடம் பெறும்.வீரம் செறிந்த அந்த விளையாட்டை கற்றுக் கொள்வதில், தற்போது, மாணவ, மாணவியர் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதை ஊக்குவிப்பது போல், முதல்வர் கோப்பை விளையாட்டிலும், சிலம்பத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.உடல், மனதை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள உதவும், இந்த வீரம் செறிந்த விளையாட்டு, கலைநயமிக்க அலங்கார சுருள் என்ற நிலையில் கலைநயம் ஊற்றெடுக்கும் விளையாட்டாகவும், ஊக்குவிக்கப்படுகிறது. அதாவது, நடனத்துக்கேற்ற ஆடை உடுத்தி, சிலம்பத்தின் நுனியில் வண்ண, வண்ண துணி கட்டி, பின்னணி இசைக்கேற்ப ஆடும் நடனம் தான், அலங்கார சுருள் என, அரசின் கலைப்பண்பாட்டுத் துறையால் அங்கீகரிக்கப்படுகிறது.''வீரக்கலையான சிலம்பாட்டத்தை ஆடல் கலையாக அங்கீகரிக்கிறோம். இசையின் பின்னணியில், அது இருக்க வேண்டும். அத்தகைய கலை நிகழ்த்தும் கலைஞர்களுக்கு, கலைப்பண்பாட்டு துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது; நலவாரிய அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. சிலம்ப கலையில் ஈடுபடுவோர், முழு நேர கலைஞர்களாக இருப்பது அவசியம். ஆனால், பலரும் பகுதி நேரமாகவே தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்'' என்கின்றனர், கலைப்பண்பாட்டு துறை அதிகாரி.திருப்பூர் முத்தமிழ் சிலம்ப பயிற்சி மைய நிறுவனர் கிருஷ்ணன் கூறுகையில், ''தற்போதைய சூழலில், சிலம்பக்கலையை வீர விளையாட்டாக கற்றுக் கொள்வதில் தான், மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கேற்ப, முதல்வர் கோப்பை உள்ளிட்ட விளையாட்டுகளில், சிலம்ப விளையாட்டு ஊக்குவிக்கப்படுகிறது. சிலம்ப பயிற்சியாளர்கள், கலைஞர்களுக்கு, கலைப்பண்பாட்டு துறை சார்பில், அடையாள அட்டை வழங்கி, ஊக்குவிப்பது வரவேற்கத்தக்கது. வீரம், கலை என இருபெரும் நிலையில், சிலம்பத்தை மாணவர்கள் கற்றுக் கொள்ள ஊக்குவிப்பு வழங்குகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி