உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகைக்கடை கொள்ளை வழக்கு 5 பேருக்கு ஆறு ஆண்டு சிறை

நகைக்கடை கொள்ளை வழக்கு 5 பேருக்கு ஆறு ஆண்டு சிறை

திருப்பூர்:திருப்பூர் புதுராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயகுமார் 45; கே.பி.என். காலனியில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 2022 மார்ச் 3ம் தேதி இவரது கடையின் பின்புற கதவை உடைத்து 3.25 கிலோ தங்க நகைகள் 28 கிலோ வெள்ளி 14.5 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.இதுதொடர்பாக பீஹார் மாநிலத்தை சேர்ந்த மஹ்தாப் ஆலம் 37 முகமது பத்ருல் 25 முகமது சுப்வான் 40 தில்காஸ் 29 முர்தஜா 37 என ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் ஜே.எம். 1 கோர்ட் மாஜிஸ்திரேட் பாரதிபிரபா குற்றவாளிகள் 5 பேருக்கும் ஆறு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்