உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிவன்மலையில் சிறப்பு வழிபாடு

சிவன்மலையில் சிறப்பு வழிபாடு

தை அமாவாசையை முன்னிட்டு, காங்கயம் சுற்றுப்பகுதியில் அனைத்து கோவில்களிலும் நேற்று, பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. முருகனுக்கு உகந்த தினம் என்பதால், சிவன்மலை கோவிலில் நேற்று வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. அதிகாலை 5:30 மணிக்கு கோவில் நடை திறந்து முதல்கால பூஜையாக கோமாதா பூஜை நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரமும் மகா தீபாராதனையும் நடந்தது. உச்சிக்கால பூஜையைத் உற்சவம் சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை சமேதரராக மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து அருள் பாலித்தார். நேற்று காலை முதல் நடந்த சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை