உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஸ்ரீஅய்யப்பன் கோவில் மண்டல பூஜை; 7ல் கொடியேற்றம்

 ஸ்ரீஅய்யப்பன் கோவில் மண்டல பூஜை; 7ல் கொடியேற்றம்

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா, வரும் 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருப்பூர் ஸ்ரீஅய்யப்பன் கோவில் 66வது மண்டல பூஜை விழா, கணபதி ேஹாம வழிபாட்டுடன் துவங்கியது. தினமும், பக்தி நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் நடந்து வருகிறது. கடந்த, 28ம் தேதி முதல், ஞாயிறு தோறும் பக்தர்களுக்கான அன்னதானமும் நடந்து வருகிறது. இரண்டாவது வாரமான நேற்று, மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் துவங்கியது; ஏராளமான பக்தர்கள் அன்னதானத்தில் பங்கேற்றனர். நேற்று முன்தினம், பெருந்துறை ரவிக்குமார் தலைமையில், 'மனித வாழ்வின் பொற்காலம் அன்றா… இன்றா ' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நேற்று, 'திருப்பூர் ட்ரீம் லேண்ட் டான்ஸ்' என்ற நாட்டியப்பள்ளி மாணவியர், 'சாஸ்தா சமர்பணம்' என்ற தலைப்பில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தினர்; பேராசிரியர் விஷாலினி தலைமையிலான குழுவினர் நடன நிகழ்ச்சிகளை நடத்தினர். 66வது மண்டல பூஜை விழா, வரும் 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் மகா கணபதி ேஹாமம், நவகலச பூஜை, பறையெடுப்பு, சங்காபிேஷகம் என, காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளது. வரும், 12ம் தேதி அய்யப்ப சுவாமிக்கு பவானி கூடுதுறையில் ஆராட்டு விழா நடக்க உள்ளது. திருப்பூர் திரும்பும் அய்யப்ப சுவாமி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் இருந்து, பஞ்ச வாத்தியம், வாணவேடிக்கை, ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். விழா ஏற்பாடுகளை, ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஅய்யப்ப பக்த ஜனசங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி