உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொதுத்தேர்வு மாணவருக்கு ஸ்ரீஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு

பொதுத்தேர்வு மாணவருக்கு ஸ்ரீஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு

திருப்பூர்;பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு, நாளை (18ம் தேதி) நடக்கிறது.திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், பொதுத்தேர்வு எழுதும் மாணவருக்காக, ஆண்டு தோறும் ஸ்ரீஹயக்ரீவர் வழிபாடு நடக்கிறது. இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான சிறப்பு வழிபாடு, கடந்த வாரம் துவங்கியது.பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, நாளை (18ம் தேதி), சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது. காலை, 9:00 மணிக்கு, சிறப்பு வேள்வி, திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம், கூட்டு பஜனையுடன், சிறப்பு வழிபாடு நடக்கிறது.பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பெயர் மற்றும் நட்சத்திர பெயரில் அர்ச்சனை செய்யப்படும். தொடர்ந்து, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான சிறப்பு வழிபாடு, வரும் 25, மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ளது.பொதுத்தேர்வை வெற் றிகரமாக எதிர்கொள்ள, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாட்டில் பங்கேற்று, பயன்பெறலாம் என, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை