உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீகுரு சர்வா மாணவர்கள் சி.ஏ., தேர்வில் சாதனை

ஸ்ரீகுரு சர்வா மாணவர்கள் சி.ஏ., தேர்வில் சாதனை

திருப்பூர்:கடந்த டிச., மாதம் நடந்த சி.ஏ., தேர்வில், திருப்பூர் ஸ்ரீகுருசர்வா நிறுவனத்தில் பயின்ற மாணவர்கள் சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.இங்கு பயின்ற மதுமிதா என்ற மாணவி, 400க்கு 329 மதிப்பெண், ஏஞ்சல் 323, கங்காதேவி 316 மற்றும் ரித்திகா 302 மதிப்பெண் பெற்று முதல் நான்கு இடங்களைப் பெற்று சிறப்பு சேர்த்துள்ளனர்.இதே நிறுவனத்தில் பயின்ற மாணவர்கள், 70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 10 ஆண்டாக சி.ஏ., பவுண்டேசன் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று வருகிறது. கடந்தாண்டு மே மாதம் நடந்த தேர்வில் மாணவர் ராஜேஷ் 800க்கு 626 மதிப்பெண்ணுடன் தேசிய அளவில், 23வது இடம் பெற்றார்.இதுதவிர, 'காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங்'கில் ஜெயகுமார் 97, விஷ்ணுபாண்டி, 96 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் சாதனை படைத்தனர். திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் செயல்படும், ஸ்ரீகுருசர்வா அகாடமியில் அனுபவமிக்க ஆடிட்டர்கள் வழிகாட்டுதலும், தொடர்ந்து நடத்தப்படும் மாதிரி தேர்வுகளும் மாணவர்களை திறம்பட கற்க வைக்கிறது.சி.ஏ., இன்டர் முழு நேர வகுப்புகள் வரும், 19ம் தேதி முதல் துவங்குகிறது. சேர்க்கை நடைபெறுகிறது. கூடுதல் விவரங்களுக்கு, 96009 22888 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ