உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில அளவிலான ஹாக்கி: அரசு பள்ளி இரண்டாமிடம்

மாநில அளவிலான ஹாக்கி: அரசு பள்ளி இரண்டாமிடம்

உடுமலை:கோவையில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில், பெதப்பம்பட்டி அரசு பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது.கோவை டெக்காத்தலான் மற்றும் ஈசி அகாடமி சார்பில் மாநில ஹாக்கிப் போட்டி, நீலாம்பூரில் நடத்தப்பட்டது. இப்போட்டியானது, 14 மற்றும் 16 வயது பிரிவின் கீழ், பள்ளி அணிகள் இடையே நடத்தப்பட்டது.அதில், 16 வயது பிரிவில் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் பங்கேற்றது. முடிவில், இரண்டாமிடம் பிடித்து அசத்தியது. தவிர, இந்த அணியின் தருண்ராஜ், சிறந்த கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.இந்த அணி மாணவர்களை, பள்ளித்தலைமையாசிரியர் கார்த்திகேயன், உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மைக்குழுவினர் உட்பட அனைவரும் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை