உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊரக வேலை உறுதி திட்டத்தில் நிலுவை தொகைக்கு போராட்டம்

ஊரக வேலை உறுதி திட்டத்தில் நிலுவை தொகைக்கு போராட்டம்

உடுமலை:உடுமலையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பாதுகாக்கவும், தொழிலாளர்களுக்கு நிலுவையின்றி ஊதியம் வழங்க வலியுறுத்தி, நாளை போராட்டம் நடக்கிறது.விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவை தொகை வழங்கவும், இத்திட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.நாளை (30ம் தேதி), காந்தி நினைவு தினத்தன்று உடுமலை குட்டைத்திடலில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலமாக சென்று ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கவுள்ளனர்.இக்கோரிக்கைகளை விளக்கி, உடுமலை ஒன்றியம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, ஏரிப்பாளையம், பெரியகோட்டை, ராஜாவூர், கணக்கம்பாளையம், குரல்குட்டை, பெரியவாளவாடி, ஜல்லிபட்டி, பள்ளபாளையம், ஆலாம்பாளையம், கொங்லகுறிச்சி , குறிச்சிக்கோட்டை, அம்மாபட்டி, லிங்மாவூர், புங்கமுத்தூர், ராவணாபுரம்,தேவனுார்பதுார் பகுதிகளில் தொழிலாளர் சந்திப்பு கூட்டங்கள் நடந்தது.மா.கம்யூ., உடுமலை ஒன்றியச் செயலாளர் கனகராஜ், கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !