| ADDED : டிச 03, 2025 06:26 AM
அவிநாசி: அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜாவின் மகன் சபரி ஆனந்த் 13. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். முதுகுத் தண்டுவடம் பாதிப்பு கொண்ட சபரி ஆனந்த், இடுப்புக்கு கீழ் செயல்பட முடியாத, நடக்கவும் முடியாத மாற்றுத்திறனாளி. இருப்பினும், மனம் தளராமல் நீச்சல் பயிற்சி செய்து, கோவா மற்றும் ஹைதராபாத்தில் தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் மூன்று தங்கப்பதக்கம் வென்றார். இதனையடுத்து கோவை வடக்கு மாவட்ட மற்றும் கிழக்கு ஒன்றிய பா.ஜ. சார்பில், சபரி ஆனந்துக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து கிழக்கு ஒன்றிய தலைவர் பிரேமா, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் நடராஜ், ராமசாமி, சரோஜினி, முருகேசன், ஜெகதீஸ்வரன், செல்வராஜ் உட்பட பா.ஜ. நிர்வாகிகள் பங்கேற்றனர்.