உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சின்னாறு வனப்பகுதியில் மாணவர்கள் களப்பணி

சின்னாறு வனப்பகுதியில் மாணவர்கள் களப்பணி

உடுமலை;உடுமலை ஆர்.ஜி.எம்., பள்ளி மாணவர்கள் சின்னாறு வனப்பகுதியில் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில், யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணியர் பிளாஸ்டிக், குப்பையை வீசிச்செல்கின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை ஆரண்யா அறக்கட்டளை, ஆர்.ஜி.எம்., பள்ளியின் சார்பில், சின்னாறு வனப்பகுதியில் துாய்மை பணிகள் நடந்தது.உடுமலை, ஆர்.ஜி.எம்., பள்ளி மாணவர்கள் சின்னாறு ரோட்டோரத்தில் பிளாஸ்டிக் பைகள், கண்ணாடி பாட்டில்கள், பல்வேறு பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தினர். பள்ளி ஆசிரியர்களும் துாய்மைப்பணியில் ஈடுபட்டனர்.உடுமலை வனச்சரகர் மணிகண்டன் முன்னிலையில், வனவர் நிமல்குமார், வனத்துறை அலுவலர்கள், கவுரவ வன உயிரின பாதுகாவலர் நந்தினி இப்பணிகளை கண்காணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை