உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோடை ஆர்டர் வேகம் கூடுகிறது; ஏற்றுமதிக்கு சாதகம்

கோடை ஆர்டர் வேகம் கூடுகிறது; ஏற்றுமதிக்கு சாதகம்

திருப்பூர்;நுால் விலையில் இம்மாதமும் மாற்றமில்லை என நுாற்பாலைகள் அறிவித்துள்ளன. கடந்த டிச., மாதத்தை காட்டிலும், கோடைக்கால ஆர்டர் வரத்து அதிகரித்துள்ளதாக, பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பஞ்சு வரத்து சீராக இருப்பதாலும், நுால் ஏற்றுமதி வர்த்தகமும் வழக்கத்தைவிட அதிகரிக்காமல் இருப்பதாலும், பஞ்சு மற்றும் நுால் விலையில் பெரிய மாற்றம் இல்லை. மூன்று மாதங்களாக, பஞ்சு விலை நிலையாக இருப்பதால், நுால் விலையில் இம்மாதமும் மாற்றமில்லை என, நுாற்பாலைகள் அறிவித்துள்ளன.பருத்தி நுால், கடந்த ஆண்டில், கிலோவுக்கு, 55 ரூபாய் உயர்ந்தது; 25 ரூபாய் வரை விலை உயர்ந்தது. இதன்காரணமாக, நுாற்பாலைகளுக்கான நெருக்கடி அதிகரித்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. நுால் விலை பல மாதங்களாக சாதகமாக இருந்தும், ஆடை உற்பத்தி வாய்ப்பு கை கொடுக்கவில்லை என்பதே கடந்தாண்டு நிலவரம்.

தை பிறந்ததும்வழி பிறந்தது

பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த டிச., மாதம் வரை, தொடர் சரிவில் இருந்தது. தற்போது, கோடைக்கால ஆர்டர் விசாரணை திருப்திகரமாக மாறியுள்ளது.ஆறு மாதங்களுக்கு பிறகு, ஆங்கில புத்தாண்டுக்கு பிறகு ஆர்டர் வரத்து சாதகமாக மாறியுள்ளது. தை பொங்கல் பண்டிகைக்கு பிறகு, ஆர்டர் வசமாகி வருவதாக, திருப்பூர் தொழில்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஆர்டர் வந்தாச்சு!

வர்த்தக முகமைகள் கூட்டமைப்பு (அபாட்) தலைவர் இளங்கோவன் கூறுகையில், ''பணவீக்கம் காரணமாக, வளர்ந்த நாடுகளிலும், மக்களின் வாழ்க்கை முறை மாறியுள்ளது. இதன்காரணமாக, ஆடை நுகர்வு குறைந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு, கோடை கால ஆர்டர்கள் ஒப்பந்தமாகி வருகின்றன. போர் சூழலை மக்கள் மறந்துவிட்டனர்; இதனால், வழக்கமான ஆர்டர்கள் வரத்து வங்கிவிட்டன; வரும் மாதங்களில், திருப்பூரின் நிலை சீராகும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ