உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அரசு பள்ளிக்கு உதவிபொருட்கள் வழங்கல்

 அரசு பள்ளிக்கு உதவிபொருட்கள் வழங்கல்

உடுமலை;உடுமலை கிராமப்புற பள்ளிகளுக்கான கல்வி சேவை அமைப்பின் சார்பில், விருகல்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.உடுமலை கிராமப்புற பள்ளிகளுக்கான கல்வி சேவை அமைப்பு, சேவகர் லயன்ஸ் சங்கம், சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் சார்பில், பள்ளிக்கான உதவி பொருட்களாக குடிநீர் சுத்திகரிப்பு கருவி, மாணவர்களுக்கு சில்வர் குடிநீர் பாட்டில்கள், பள்ளி துாய்மைக்கான பொருட்களும் வழங்கப்பட்டன.விழாவை, ஆசிரியர் ஜவகர் ஒருங்கிணைத்தார். சங்க நிர்வாகிகள் தமிழ்செல்வன், ராஜூசுந்தரம், மணி, முத்துகுமார், முருகேசன் உதவிபொருட்களை வழங்கினர்.நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வித்துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !