உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் புத்தக கண்காட்சியில் தாமரை பிரதர்ஸ் மீடியா அரங்கு

திருப்பூர் புத்தக கண்காட்சியில் தாமரை பிரதர்ஸ் மீடியா அரங்கு

திருப்பூர்;திருப்பூரில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில், தாமரை பிரதர்ஸ் மீடியா நிறுவன அரங்கில், பல்வேறு தலைப்பிலான வெளியீடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது.திருப்பூர் - காங்கயம் ரோடு, வேலன் ஓட்டல் வளாகத்தில், 20 வது புத்தக திருவிழா கடந்த 25 ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் பிப்.,4ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், பல்வேறு பதிப்பகங்கள், விற்பனையாளர்கள் அரங்கு அமைத்துள்ளனர்.கண்காட்சி வளாகத்தில், 'தாமரை பிரதர்ஸ் மீடியா' நிறுவனம், ஸ்டால் எண்: 122 அரங்கில் நுால்களை விற்பனை செய்கிறது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள 78 தலைப்புகளில் அமைந்துள்ள பல்வேறு நுால்கள் இங்கு விற்பனையாகிறது. புத்தக ஆர்வலர்கள் அரங்கை பார்வையிட்டு இதன் வெளியீடுகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஆன்மிகம், அறிவியல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு நுால்கள் இடம் பெற்றுள்ளன.அந்துமணியின் பா.கே.ப., தொகுப்பு; சமஸ் எழுதிய சோழர்கள் இன்று; ஆதலையூர் சூரியகுமாரின் சம்பிரதாய சயின்ஸ் உள்ளிட்ட பல்வேறு தலைப்பிலான புத்தகங்கள் விற்பனையாகிறது. இந்த அரங்கில் உள்ள புத்தகங்களைப் பார்வையிட்டு, புத்தக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் அவற்றை வாங்கிச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி