உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பசுமை வளாகமாகிறது கல்லுாரி

பசுமை வளாகமாகிறது கல்லுாரி

முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மல்பெரி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. துவக்கமாக, நாட்டு நலப்பணி மாணவர்கள் 10 கன்றுகளை நட்டனர். மொத்தம் 100 கன்றுகள் நடப்படுகின்றன. கல்லுாரி முதல்வர் நளதம் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தாரணி, ஆங்கிலத்துறை பேராசிரியர் காயத்ரி, பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் திலகவதி, இளநிலை ஆய்வாளர் பிரவீன் குமார், பட்டு தொழில்நுட்ப சேவை மைய உதவி ஆய்வாளர் மேனகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பசுமை வளாகமாக கல்லுாரியை மாற்ற மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை