உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இந்தியா ஜூவல்லரி எக்ஸ்போ இன்றுடன் நிறைவு பெறுகிறது

இந்தியா ஜூவல்லரி எக்ஸ்போ இன்றுடன் நிறைவு பெறுகிறது

திருப்பூர்:திருப்பூர், பாப்பீஸ் விஸ்டா ஓட்டலில், நகை கண்காட்சி நேற்று துவங்கியது. இன்றுடன் நிறைவடையும் இக்கண்காட்சியில் பல்வேறு முன்னணி நகை விற்பனை நிறுவனங்கள் அரங்கு அமைத்துள்ளன.இந்தியா ஜூவல்லரி எக்ஸ்போ என்ற தலைப்பில், திருமுருகன் பூண்டி, பாப்பீஸ் விஸ்டா ஓட்டலில் இரு நாள் நகை கண்காட்சி நேற்று துவங்கியது. இன்று நிறைவடையும் இக்கண்காட்சி காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறும்.இந்திய அளவில் ஆடம்பரமான, நளினமான டிசைன் நகைகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் 30 நகை நிறுவனங்கள் இங்கு அரங்கு அமைத்துள்ளன. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்வேறு டிசைன் நகைகள் இடம் பெற்றுள்ளன.தங்கம் மட்டுமின்றி, வைரம், வைடூரியம் உள்ளிட்ட கற்கள் பதித்த நகைகள், பிளாட்டினம், வெள்ளி, குந்தன், ஜடாவு நகைகள் உள்ளன. மேலும், கண்காட்சியில் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு 91500 95974 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி