மேலும் செய்திகள்
போக்குவரத்து நெரிசல்
5 minutes ago
நிழற்கூரை அவசியம்
5 minutes ago
அய்யப்பன் விக்ரஹம் பிரதிஷ்டை
17-Nov-2025
உடுமலை: ஒவ்வொரு மண்டல பாசனத்தின் போதும், பிரதான கால்வாய் உடையும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து புனரமைப்பு செய்ய வேண்டும் என இரு மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., நான்கு மண்டல பாசனத்துக்கும் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு ஆதாரமான பிரதான கால்வாய், 123 கி.மீ., தொலைவுக்கு அமைந்துள்ளது. பயன்பாட்டுக்கு வந்து நீண்ட காலமானதால், கால்வாய் பல இடங்களில், கரைகள் சரிந்து வலுவிழந்து காணப்படுகிறது. ஒவ்வொரு மண்டல பாசனத்தின் போதும், பிரதான கால்வாய் ஏதாவது ஒரு பகுதியில் உடைந்து தண்ணீர் நிறுத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்த சீசனில், வாவிபாளையம் பகுதியில், உடைப்பு ஏற்பட்டது. உடுமலை பகுதியிலும் பல்வேறு இடங்களில், பிரதான கால்வாய் மோசமான நிலையில் உள்ளது. அப்பகுதிகளில், மண்டல பாசனத்துக்கு முன் பொதுப்பணித்துறையால், பெயரளவுக்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், நீர் விரயம் அதிகரிக்கிறது. கடைமடை பாசன பகுதிகளில், தட்டுப்பாடு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, பி.ஏ.பி., பிரதான கால்வாயை முழுமையாக புனரமைக்க வேண்டும் என, இரு மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பொதுப்பணித்துறையால், பல முறை அரசுக்கு கருத்துருவும் அனுப்பியுள்ளனர். ஆனால், போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. விவசாயிகள் கூறியதாவது: பி.ஏ.பி., பாசனத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை்அரசு கண்டுகொள்வதில்லை. சில மாதங்களுக்கு முன், தமிழக முதல்வர் கால்வாய் சீரமைப்புக்கு, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தெரிவித்தார். அந்த நிதியில் எவ்வித பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து விளக்கமளிக்கப்படவில்லை. ஒவ்வொரு சீசனிலும், கால்வாய் உடைப்பு தொடர்கதையாக இருப்பது வேதனையளிக்கிறது. இவ்வாறு, தெரிவித்தனர்.
5 minutes ago
5 minutes ago
17-Nov-2025