உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நல்லுார் ரோடு நல்லா இல்லே!

 நல்லுார் ரோடு நல்லா இல்லே!

திருப்பூர்: நல்லுார் - காசிபாளையம் ரோடு சீரமைக்கப்படாமல் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது, திருப்பூர், காங்கயம் ரோட்டில் நல்லுாரில் இருந்து ஈஸ்வரன் கோவில் வழியாகச் செல்லும் பிரதான ரோடு காசிபாளையம், சிட்கோ பகுதிகளுக்குச் செல்லும் வகையில் உள்ளது. இந்த ரோடு நொய்யல் பாலம் கடந்து ஊத்துக்குளி ரோட்டைச் சென்றடைகிறது. இரு முக்கிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையிலான ரோடாக உள்ளது. தொழிற்சாலைகள், வீடுகள் என ஏராளமான பகுதிகளை இணைப்பதாகவும் இந்த ரோடு உள்ளது. இந்த ரோட்டில் எந்நேரமும் சரக்கு வாகனங்கள் மட்டுமின்றி சொந்த வாகனங்கள் போக்குவரத்தும் அதிகம் காணப்படுகிறது. ரோட்டில் கடந்த பல மாதங்களாக பாதாள சாக்கடை திட்டத்துக்கும் நான்காவது குடிநீர் திட்டத்துக்கும் குழாய்கள் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக குழிகள் தோண்டி குழாய் பதிப்பு பணி நடந்தது. இந்த ரோடு குண்டும் குழியுமாக மாறியது. அதன் பின் பல மாதங்களாக இங்கு பணிகள் நடைபெற்றது. குழாய்கள் பதித்து முடித்து தற்போது அதற்காகத் தோண்டிய குழிகள் மூடப்பட்டுள்ளன. குழிகள் அனைத்தும் முறையாகவும், முழுமையாகவும் மூடப்படவில்லை, இதனால் குண்டும் குழியுமாக ரோடு மாறியது. வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் நிலவுகிறது. தற்போது ஏற்பட்ட குழாய் உடைப்பு காரணமாக பல இடங்களில் குடிநீர் வெளியேறி ரோட்டில் வீணாகப் பாய்கிறது. ஏற்கனவே குண்டும் குழியுமாக உள்ள ரோடு தற்போது மேலும், சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இந்த ரோடு ஒரு பாதி மட்டுமே பயன்படுத்தும் நிலையில் பெரும்பாலும் உள்ளது. ரோடு சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை