உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்டத்தின் பல இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல்

மாவட்டத்தின் பல இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல்

திருப்பூர்;குறைந்தபட்ச மாத ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் நடந்த மறியல் போராட்டங்களில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர்.திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., - எல்.பி.எப்., - ஐ.என்.டி.யு.சி., - எச்.எம்.எஸ்., - எல்.பி. எப்., - ஐக்கிய விவசாய முன்னணி ஆகிய அமைப்பினர் கலந்து கொண்ட மறியல் போராட்டம் நடந்தது.தொழிலாளர்களுக்கு 26 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்குதல், தொழிலாளர் சட்ட திருத்தங்கள் திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்துக்கு தொழிற்சங்கத்தினர் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து இப்போராட்டம் நடந்தது.திருப்பூர் மத்திய தபால் நிலையம் முன், ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் சேகர் தலைமையில் மறியல் நடந்தது. குமார் (சி.ஐ.டி.யு.,), ரங்கசாமி (எல்.பி.எப்.,), சிவசாமி (ஐ.என்.டி.யு.சி.,), முத்துசாமி (எச்.எம்.எஸ்.,), சம்பத் (எம்.எல்.எப்.,) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற 125 பெண்கள் உட்பட 361 பேர் கைது செய்யப்பட்டனர்.தாராபுரம்: அண்ணாதுரை சிலை முன் மறியல் போராட்டம் எல்.பி.எப்., மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமையில் நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.ஊத்துக்குளி: பஸ் ஸ்டாண்டிலிருந்து ஊர்வலமாகச் சென்ற தொழிற்சங்கத்தினர், பரோடா வங்கி முன், விஜயமங்கலம் ரோட்டில் மறியல் செய்தனர். விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை வகித்தார். தொழிற்சங்க நிர்வாகிகள், ஈஸ்வரன், சுப்ரமணியம், கந்தசாமி, பழனிசாமி முன்னிலை வகித்தனர். மறியலில் ஈடுபட்ட 175 பேரை போலீசார் கைது செய்தனர்.அவிநாசி: தபால் அலுவலகம் முன்பு மறியல் நடந்தது. சி.ஐ.டி.யு., மாநில குழு உறுப்பினர் முத்துச்சாமி, பொதுத் தொழிலாளர் சங்கம் ஈஸ்வரமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், அங்கன்வாடி சங்கம் சார்பில் வளர்மதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வேலுச்சாமி, குமாரசாமி, கருப்பசாமி, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் மோகன், இஷாக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.காங்கயம், பல்லடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மறியல் நடந்தது.

போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில் மறியல் நடந்த நிலையில், போலீசார் வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர். இருப்பினும் பஸ்கள் உள்ளிட்ட சில வாகனங்கள் நிறுத்தப்பட்டன. குமரன் ரோடு வழியாக வாகனங்கள் சென்ற போது, போராட்டத்தில் ஈடுபட்டோர் அந்த ரோட்டையும் மறித்தனர்.மறியலின் போது அவ்வழியாக ஒரு முதியவர் மொபட்டில் வந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் அவரை தடுத்து வாக்குவாதம் செய்து தாக்க முயன்றனர். இதில் அவரது மொபட் சரிந்து, ெஹல்மெட் கீழே விழுந்து சேதமானது. போலீசாரும் வேறு சில நிர்வாகிகளும் அவரை அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

படம் வைக்கவும்

--------------போலீசுடன் தள்ளுமுள்ளுமறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் தலைமைத் தபால் அலுவலகத்துக்குள் நுழைந்து முற்றுகையிட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நுழைவாயில் கேட்டை மூடி பாதுகாப்பாக நின்றிருந்தனர். உள்ளே நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்த போது இரு தரப்பிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் சில போலீசார் கூட்டத்தில் சிக்கி தடுமாறி, பின்னர் சமாளித்துக் கொண்டு பணியைத் தொடர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை