உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கணிதத்தில் அடங்கிய உலகம்; இயற்கை சொல்லும் ரகசியம்

 கணிதத்தில் அடங்கிய உலகம்; இயற்கை சொல்லும் ரகசியம்

உ லகம் பலவிதமாக நம்மை ஆச்சரியப்படுத்து கிறது. மலரின் வடிவம், அலைகளின் தாளம், மரங் களின் வளர்ச்சி எல்லாமே ஒரு கலை. அத்தனைக்கும் பின் ஒரு கணக்கு ரகசியம் ஒளிந்திருக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அந்த ரகசியத்தை 'பிபனோச்சி' என்று அழைப்பர். 0, 1 ஆகிய இரு எண்களை முன்வைத்து 1, 1, 2, 3, 5, 8, 13, 21... என்ற வரிசை 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இத்தாலிய கணிதவியலாளர் பிபனோச்சி கண்டுபிடித்தார். இந்த எண்கள், இயற்கையின் அடையாளமாக இருக்கிறது. எண்களின் அழகு ஒவ்வொரு எண்ணும், முன் வரும் இரு எண்களை கூட்டியதே. அதிகப்படியாக 1.618 என்ற விகிதத்தில் இருக்கும் இது, 'பொன் விகிதம்' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு கணித வரிசை மட்டுமல்லாது, இயற்கையின் பல இடங்களில் பரவலாக காணப்படுகின்றன. பொருந்தும் 'பிபனோச்சி' கணிதவியல் பேராசிரியர்கள் கூறியதாவது: மலர், மரம், பழம், சிப்பி, மனித உடல், புயல் சுழல்கள் இந்த வரிசையைக் கடைபிடிக்கின்றன. சூரியகாந்தி மலரை எடுத்துப் பாருங்கள். அதன் விதைகள் வட்டத்துக்குள் சுற்றிச் சுற்றி அமைந்திருக்கும். அன்னாசிப் பழத்தை நேராக நுனியில் இருந்து கீழே பார்த்தால் அதிலுள்ள வட்டப்படலம் சுழல் வடிவில் இருக்கும். ஒரு மரம் வளரும்போது ஒவ்வொரு கிளையும் வெளிச்சத்தைப் பெறும் வகையில் விரிகிறது. அந்த இடைவெளி அப்படியே பிபனோச்சி அமைப்புடன் பொருந்தும். நம் விரல்களை எடுத்துக்கொள்வோம். விரல்களை மடக்கும்போது சுழல் வடிவில் இருக்கும். ஒவ்வொரு விரலிலும் மூன்று எலும்புகள் உள்ளன. அவற்றின் அள வும், இந்த பிபனோச்சி எண்களுடன் பொருந்துகிறது. சமநிலை குலையாமல்... நத்தை ஓடு, சிப்பியின் வளைவு, புயலின் சுழல், மனித கைரேகை, பால் வெளி மண்டலம் என எல்லாம் அதே -வடிவத்தை பின்பற்றுகிறது. இது, இயற்கை தானாகவே பின்பற்றும் அமைப்பு. ஒவ்வொரு சுழலும் முனையும் முன்னதை விட சற்று பெரியது. இந்த சுருள் வடிவம் 'பூக்கும் மலர்' போல இருக்கும். இந்த உலகம் எண்ணுறையால் வரையப்பட்டது. ஒரு கலைஞன் வரைந்த ஓவியம் போல, இயற்கை எல்லாவற்றையும் சமநிலை குலையாமல் அமைக்க ஒரு ஸ்கேல், காம்பஸ் போல இந்த 'பிபனோச்சி' விகிதத்தை பயன்படுத்துகிறது. ஆண்டுதோறும் நவ. 23 பிபனோச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இது கணித விழா இல்லை. இயற்கைக்கும், நம் வாழ்விற்கும் மெதுவான, மறைந்திருக்கும் வடிவத்தை நினைவுப்படுத்தும் நாள். இயற்கையை நேசிக்கும், வாழ்க்கையின் நுணுக்கங்களை ரசிக்கும் ஒவ்வொருவருக்கும்இந்த நாள் ஒரு கொண்டாட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை