உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொட்டி உண்டு... தண்ணீர் இல்லை! கிராம மக்கள் கண்ணீர்

தொட்டி உண்டு... தண்ணீர் இல்லை! கிராம மக்கள் கண்ணீர்

பல்லடம்;பல்லடம் ஒன்றியம், பூமலுார் ஊராட்சிக்கு உட்பட்ட பசுமை நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் பயனடையும் வகையில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றிய பொது நிதியின் கீழ் கட்டப்பட்டது. தொட்டி இருக்க, தண்ணீர் சரிவர வருவதில்லை என இப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:கடந்த, 2019--20ம் ஆண்டு, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி இப்பகுதியில் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் முறையாக வினியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது சரிவர வருவதில்லை. மாதத்துக்கு ஒருமுறை என்ற நிலையில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.இப்பகுதிக்கு வரவேண்டிய குடிநீர் வேறு எங்கும் செல்கிறதா என்ற சந்தேகம் உள்ளது. எனவே, இப்பகுதிக்கு ஒதுக்கப்பட்ட குடிநீர் முறையாக கிடைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி