உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்

அவிநாசி ராயம்பாளையத்தில் உள்ள காட்டு மாரியம்மன் கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.முன்னதாக பொட்டுச்சாமி பொங்கல், காப்பு கட்டுதல், கம்பம் நடுதல் ஆகியவை 13ம் தேதி நடந்தது. சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள், அபிஷேகம் ஆகியவை நடந்தன.வரும் 22ம் தேதி அம்மன் அழைத்தல், பூவோடு, விளக்கு மாவு எடுத்து வருதல், கரகம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும் 23ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை